காளியப்ப கவுண்டனூரில் கள் விற்றவர் கைது
காளியப்ப கவுண்டனூரில் கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-05-03 13:02 GMT
காளியப்ப கவுண்டனூரில் கள் விற்றவர் கைது. 2- லிட்டர் கள் பறிமுதல்.காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 2-ம் தேதி காலை 8 மணி அளவில், அருகிலுள்ள காளியப்ப கவுண்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், கள் விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கள் விற்பனையில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், வையாபுரி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் கருப்பசாமி வயது 39 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்தார் 2 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். மேலும் கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்தனர் வெள்ளியணை காவல்துறையினர்.