கெங்கவல்லி அருகே பரபரப்பு போஸ்டர்
அம்பேத்கர் சிலை திறந்தால் மட்டுமே வாக்களிப்போம் என்று போஸ்டர் ஒட்டிய ஆதிதிராவிட பொதுமக்களால் பரபரப்பு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 09:41 GMT
கெங்கவல்லி அருகே பரபரப்பு போஸ்டர்
கெங்கவல்லி அருகே பரபரப்பு போஸ்டர்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட ஒதியத்தூர் ஊராட்சியில் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கிறோம் என்று அந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிட பொதுமக்கள் பரபரப்பு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டி பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் அம்பேத்கர் சிலை திறந்தால் மட்டுமே வாக்களிப்போம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.