பளுகல் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்ற  கடைக்கு சீல்.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கடைகளில் சோதனையில் ஈடுப்பட்ட போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

Update: 2023-12-24 05:39 GMT
கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் .
கன்னியாகுமரி மாவட்டத்தில் பளுகல்,  ராமவர்மன் சிறை  பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் இன்று அங்கு சென்று குறிப்பிட்ட ஒரு கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து 21 கிலோ புகையிலை பொருள்களை பருமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சுரேஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான சுரேஷ்குமார் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளதால்,  மாவட்ட  கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விடுத்திருந்தனர் அதன்படி சுரேஷ் குமார் கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் போலீசார் சீல் வைத்தனர்.
Tags:    

Similar News