கொடைக்கானல் பேருந்து நிலைய பகுதியில் ஒற்றை காட்டெருமை உலா

கொடைக்கானல் பேருந்து நிலைய பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டெருமையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-20 07:31 GMT

காட்டெருமை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டெருமைகள் நகர் பகுதிக்குள் உலா வருவதும் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும்,விவசாயிகள் மற்றும் கால்நடைகளை தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது,இந்நிலையில் கொடைக்கானலில் அதிக மக்கள் கூடும் இடமான பேருந்து நிலையத்தில் இன்று மாலை வேளையில் ஒற்றை காட்டெருமை புகுந்து பேருந்து நிலையம் முதல் அண்ணாசாலை வரை உலா வந்தது,இதனையடுத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்காமல் சாலையிலேயே நிறுத்தினர் .

இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் காட்டெருமை அருகே சென்று செல்பி மற்றும் புகைப்படம்எடுத்து காட்டெருமையை கூட்டமாக பின் தொடர்ந்தனர், தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டி சென்றனர்.மேலும் அவ்வபோது நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளின் ஆபத்தை உணராமல் அருகே சென்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் காட்டெருமைகளை நகர்ப்பகுதிக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News