ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி ஆறு மாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி பலி
ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி ஆறு மாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Update: 2024-03-24 17:34 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காந்தி நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி அபிநயா (24) இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர்கள் வலைகாப்பிற்காக வந்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக கீழக்குடியிருப்பு தனியார் திருமண மண்டபத்திற்கு முன்பாக உறவினரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக அபிநயா மீது மோதியது இதில் அபிநயா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார் காயமடைந்து மயங்கி கிடந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய தஞ்சாவூர் ரயில் நகரை சேர்ந்த சூசைமாணிக்கம் என்பவரது மகன் பீட்டர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.