சைக்கிள் கடைக்குள் புகுந்த பாம்பு உயிருடன் மீட்பு:
மல்லசமுத்திரத்தில் சைக்கிள் கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.;
By : King 24x7 Website
Update: 2023-12-30 16:35 GMT
மல்லசமுத்திரத்தில் சைக்கிள் கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
மல்லசமுத்திரம் மேற்குரத வீதியில் சைக்கிள்கடை நடத்தி வருபவர் சர்தார்60. நேற்று மாலை சுமார் 3மணிக்கு சைக்கிளை சரிசெய்துகொண்டிருந்தபோது, அருகிலிருந்த முருகன் கோவில் சந்தில் இருந்து பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்துள்ளது. சர்தார் பயந்துகொண்டு, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆறுமுகம் தலைமையிலான 5பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் 7அடி நீளம், 4கிலோ அளவிலான மஞ்சள்சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து, ஆட்டையாம்பட்டி வனப்பகுதியில் விட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.