குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு ஸ்மார்ட் டி.வி வழங்கிய சமூக ஆர்வலர்

வேலூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் உள்ள சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பொழுதைப் போக்க ஸ்மார்ட் டிவியை வேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஸ் சரவணன் வழங்கியுள்ளார்.

Update: 2024-05-13 02:13 GMT

 ஸ்மார்ட் டிவி வழங்கல் 

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அடுக்கம்பாறையில் இயங்கி வருகிறது. இங்குள்ள குழந்தைகள் வார்டில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறும் குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை போக்குவதற்கு அந்தவார்டில் ஒரு ஸ்மார்ட் டி.வி. வைப்பதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டது.

இதனை அறிந்த வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் 32 அளவுடைய ஸ்மார்ட் டி.வியை மருத்துவமனை முதல்வர் ராஜவேலிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட அவர், தினேஷ் சரவணனின் சமூக சேவையை பாராட்டினார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், குழந்தைகள் நலப்பிரிவு பேராசிரியர் தாட்சாயிணி, டாக்டர் ராஜராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News