மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
மாற்று திறனாளிகள் முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
Update: 2023-12-16 09:24 GMT
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைப்பெற்ற முகாமில் 72 மாற்று திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு அனுப்பட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கபட்டது. இதனையடுத்து மூன்று மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டியும், 06 மாற்று திறனாளி நபர்களுக்கு காதொலி கருவிகளும் வழங்கபட்டது. இதில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.