ஒரத்தநாட்டில் ஜூன்.19 இல், உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்
ஒரத்தநாட்டில் ஜூன்.19 இல், உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும்,
மூன்றாவது புதன்கிழமை ஒருநாள் முழுவதும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 19.06.2024 (புதன்கிழமை) அன்று ஒரத்தநாடு வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் முகாம் மேற்கொண்டு 19.06.2024 அன்று காலை முதல் களஆய்வுப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து அன்று மதியம் 2.30 மணியளவில் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமானது ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 19.06.2024 அன்று மாலை 04.30 மணியளவில் ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரால் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.