தேர்தல் ஈடுபடும் அலுவலர்களுக்கு வாக்களிக்கு சிறப்பு மையம்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்களிக்க சிறப்பு மையம் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை செயல்படுகிறது மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-13 02:31 GMT
தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் பிற நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி யில் ஈடுபடும் அலுவலர்கள் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்கு அளிக்கலாம். இதே போல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காவல்துறை அலுவலர் களும், நுண் பார்வையாளர்களும் தபால் வாக்கு அளிக்கலாம். இதேபோல் இன்று வாக்களிக்க இயலாத அலுவலர்களும் இந்த சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் தபால் வாக்கு அளிக்கலாம். சிறப்பு வாக்குப்பதிவு பயத்தில் வாக்குப்பதிவு நிகழ்வுகளை வேட்பாளர்கள் முகவர்கள் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News