புத்தாண்டை முன்னிட்டு உதகையில் சிறப்பு பிரார்த்தனை
புத்தாண்டை முன்னிட்டு உதகையில் உள்ள தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-01 11:11 GMT
சிறப்பு பிரார்த்தனை
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டை வெகுவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 2023 நிறைவடைந்து புதியதாக பிறந்துள்ள 2024-ம் ஆண்டை திருப்லி நிறைவேற்றி கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், பங்குத்தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்குதந்தை ஜூட் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்த திருப்பதியில் உலக அமைதிக்காவும், உலக மக்கள் நலன் பெறவும், கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.