7 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற வினோத திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அருகே அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய கருப்பண்ணசாமி கோயில் திருவிழா 7 ஆண்டுகளுகுப்பின் நடைபெற்றது.

Update: 2024-05-25 04:56 GMT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அருகே அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய கருப்பண்ணசாமி கோயில் திருவிழா 7 ஆண்டுகளுகுப்பின் நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அருகே உள்ள பங்களாப்பட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக செல்லாயி அம்மன் கோவில் இருந்து வருகிறது.நேற்று இரவு தொடங்கிய விழாவில் வானவேடிக்கைகள், மேளதாளத்துடன் அம்மன் பூங்கரகம் அழைத்து ஊர்வலம் நடைபெற்றது, நேற்று காலை முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், கும்மி அடித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பணசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கருப்பணசாமி அரிவாலில் ஏறி ஆடியும், சாட்டையால் அடித்தும் அருள்வாக்கு கூறி பிரசாதம் வழங்கினர், இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல், மதுரை, கோவை, திருச்சி ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கனக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News