பெற்றோரை இழந்த மாணவன் 429 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

திருப்பூரில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவன் பன்னிரண்டாம் வகுப்பில் 479 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2024-05-06 14:40 GMT

திருப்பூரில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவன் பன்னிரண்டாம் வகுப்பில் 479 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.


கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவன் அரசுப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 479 மதிப்பெண்கள் பெற்று சாதனை. பைலட்டாக விரும்பும் மாணவனின் கனவு வறுமையால் சிதையுமோ என கவலை. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னக் கவுண்டன் வலசு என்ற கிராமத்தில் சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் திருவருட்செல்வன் (17).இவரது பெற்றோர் புகழேந்திரன் மற்றும் மாலதி ஆகியோர் கொரோனா பொது முடக்க காலகட்டத்தில் கொரோனா தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இதையடுத்து, ஆதரவற்ற திருவருட்செல்வன் தனது மூத்த சகோதரி லாவண்யா உடன் அவரது தாய் மாமாவான வேல்முருகன் பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றார்.திருப்பூர் பனியன் கம்பெனியில் டெய்லராக பணிந்து புரிந்து வரும் வேல்முருகன் தனது சொற்ப சம்பளத்தை வைத்து திருவருட்செல்வன் மற்றும் அவரது மூத்த சகோதரி லாவண்யா ஆகியோரை படிக்க வைத்து வளர்த்து வருகிறார்.லாவண்யா தற்போது காங்கயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு படித்து வருகிறார்.  கெட்டிச்செவியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவருட்செல்வன், 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 

அவர் பெற்ற மதிப்பெண்கள்...       தமிழ்:   80       ஆங்கிலம்:   41       புள்ளியியல் :   90       பொருளியல்:  86       வணிகவியல்:   94       கணக்குப்பதிவியல் :   88       மொத்தம்: 479      பெற்றோரை இழந்து தாய் மாமன் அறவணைப்பில் அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற திருவருட்செல்வன், பைலட் ஆவதே தனது கனவு என  கூறுகிறார். மேல்படிப்பு படிக்கும் சூழ்நிலையில் தனது குடும்ப நிலை இல்லாத போது, பைலட் ஆகும் தனது கனவை நல்ல உள்ளம் கொண்டோர் நிறைவேற்ற உதவுவார்களா? என ஆதரவு கரங்களை தேடி, அறைகூவல் விடுக்கும் இந்த ஏழை மாணவனின்  அழுகுரலுக்கு யாரேனும் செவிசாய்ப்பார்களா, என்று ஏக்கத்தோடு காத்திருக்கின்றார் திருவருட்செல்வன்.

Tags:    

Similar News