தாமரை பூ பறிக்க சென்ற மாணவி சேற்றில் சிக்கி உயிரிழப்பு
கந்திலி அருகே குளத்தில் தாமரை பூ பறிக்க சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே குளத்தில் தாமரை பூ பறிக்க சென்ற ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி சேற்றில் சிக்கி உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் இவருக்கு துர்கா தேவி, அபிராமி, கார்த்திகா, என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால் மூன்று பெண் பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரியகரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் துர்காதேவி, மற்றும் அவருடைய தங்கைகளான அபிராமி, கார்த்திகா ஆகிய மூவரும் இலக்கிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளனர்.அப்போது ஜல்லியூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் இருந்த தாமரை பூக்களை பறிக்க துர்கா தேவி சென்றுள்ளார்.அப்போது குளத்தில் உள்ள சேற்றில் மாட்டிக் கொண்டு துர்கா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தங்கைகள் கத்தி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் குளத்தில் இறங்கி துர்கா தேவியை வெளியே கொண்டு வந்தனர் அதற்குள் துர்கா தேவி உயிரிழந்தார். பின்னர் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்