பறக்கும் படையினா் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து தோதல் செலவின கணக்கு பாா்வையாளா் விகாஷ் சிங் ஆய்வு மேற்கொண்டாா்.

Update: 2024-03-21 10:30 GMT

 விகாஷ் சிங்  

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவின கணக்கு பாா்வையாளராக விகாஷ் சிங், இந்திய தோதல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டாா். தோதல் தொடா்பான செலவினங்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட இவா், திண்டுக்கல்லுக்கு புதன்கிழமை வந்தாா். நிலக்கோட்டையை அடுத்த பள்ளப்பட்டி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரின் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி உடனிருந்தாா்.
Tags:    

Similar News