குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம்

கோவில்பட்டியில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தில் கோள்கள் திருவிழா நடந்தது.

Update: 2024-05-26 06:19 GMT

கோள் திருவிழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் குழந்தைகளுக்கு கோள்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது.டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குழந்தைகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக்க்கு மாற்றுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்,ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு அதில் உளுந்தங்களி, கேப்பைரொட்டி, பயறுவகைகள்,சிறுதானிய உணவுகள்,உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை வகித்தார்,வட்டார கல்வி அலுவலர்கள் பத்மாவதி முத்தம்மாள்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி துணை ஆய்வாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பிரதீப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

Tags:    

Similar News