6 பிள்ளைகளைப் பெற்ற ஆசிரியர் தம்மை கருணைக்கொலை செய்யக்கதறல்

பெற்றோரை பராமரிப்பதாக கூறி சொத்துக்களை பெற்றுக்கொண்டு நிர்கதியாகவிட்ட பிள்ளைகள் கொடுத்த சொத்தை மீட்டுத் தர கோரி 3 முறை மனு எங்களை கருணை கொலை செய்தவர்கள் என ஓய்வு பெற்ற 84வயது தலைமை ஆசிரியர் மனைவியுடன் கதறல்.

Update: 2024-03-11 16:22 GMT

மனு

மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்லதுரை (84) -கலியம்மாள்(76) தம்பதியினர். இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து செல்லதுரை தனது சொந்த உழைப்பில் வாங்கிய சொத்துக்களை செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து தன்னையும் தன்மனைவியையும் பராமரிக்க கோரியுள்ளார். ஓய்வுபெற்றபின் பென்சன் வாங்கும் பணத்தில் குடும்பம் நடத்தும் செல்லதுரை மனைவி கலியம்பாள் கால்முறிவு கிட்னி பிரச்சனையால் நிலத்தை அடமானம் வைத்து செலவு செய்து வட்டி கட்டி வருவதாகவும், ஆனால் சொத்தை வாங்கி கொண்ட மகன் மற்றும் மகள்கள் தங்களை பரமாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய செல்லையன் தன் சொத்தை திரும்ப பெற்றுத்தரும்படி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலவலகத்தில் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் விதிகள் 2007-ன்கீழ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீது இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டதில் செல்லையன் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனையில் செட்டில்மென்ட் பத்திரத்தை செல்லையன் ரத்து செய்ய கோருவது தெரியவந்ததால் செல்லையனின் வாரிசுதாரர்களான மகன் முத்துக்குமாரசுவாமி, மகள்கள் கலைச்செல்வி, தேவி, பிரசன்னதேவி ஆகிய 4 பேரும் செல்லதுரை, கலியம்மாள் இருவரையும் அவர்களது வாழ்நாள் முழுவதும் நல்லமுறையில் கவனித்துக் கொள்ள கோட்டாட்சியர் ஆணையிட்டார். ஆனால், அதன்பின்னரும் பிள்ளைகள் யாரும் கண்டுகொள்ளவில் என்று கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வயோதிக தம்பதியினர், பிள்ளைகளுக்கு எழுதித்தந்த சொத்துக்களை மீண்டும் தங்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என மகக்ள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். இதுவரை 3 முறை மனு அளித்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Tags:    

Similar News