பிள்ளையார்நத்தம் சாலையை நெடுஞ்சாலை பொறியாளர்கள் குழு ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - பிள்ளையார்நத்தம் சாலையை நெடுஞ்சாலை பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 15:36 GMT
திண்டுக்கல் கோட்டம், நத்தம் உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நத்தத்திலிருந்து பிள்ளையார் நத்தம் சாலையில் 2.8 கி.மீ தூரம் சாலையானது ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2023-24 ன் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு பணி நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடந்ததையடுத்து இப் பணியினை நபார்டு கிராமச் சாலைகள் நெடுஞ்சாலைகள்,
அலகின் திருச்சி கோட்டப் பொறியாளர் நிர்மலா, மதுரை கோட்டப் பொறியாளர் சந்திரசேகர், திண்டுக்கல் உட்கோட்ட உதவி பொறியாளர் பொன்னுவேல் ஆகியோர் உள் தணிக்கை செய்யும் பணி மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.