தந்தை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
தூத்துக்குடி அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-03-26 02:18 GMT
தூத்துக்குடி அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள சிப்பிகுளம் கிராமம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் மகள் சுபாஷினி (24). இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பாராம். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுபாஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராஜகுமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.