திருப்பூரில் தாய்மாமன் மகளை திருமணம் செய்ய முடியாததால் வாலிபர் தற்கொலை
திருப்பூரில் தாய்மாமன் மகளை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூரில் தாய் மாமன் மகளை திருமணம் செய்ய முடியாததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை! திருப்பூர் முருகம்பாளையம் பகவதிநகரை சேர்ந்தவர் மருத பாண்டியன். (வயது 27) இவர் பிரிண்டிங் வேலை செய்து வந்தார். இவர் தனது தாய் மாமன் மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தனது பெற்றோருடன் சென்று தனது மாமன் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெண்ணின் பெற்றோர் ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடப்பது குறித்து மருதபாண்டியனக்கு தெரிய வந்தது. இதனால் மனம் உடைந்த மருதபாண்டியன் மதியம் வேளையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். பின்பு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் மருதபாணியனின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வீரபாண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.