கீழ்வேளூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் பலி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழக்காவலக்குடி காலனி தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 26 ) மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பலியானர்.

Update: 2024-04-18 14:31 GMT

கோப்பு படம் 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழக்காவலக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்.இவரது மகன் அருண்குமார் (வயது 26 )விவசாய கூலி தொழிலாளி .நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தேவூர் கடைத்தெருவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

தேவூர் பெட்ரோல் பங்க் அருகே வரும் போது எதிரே கீழ்வேளூர் கீழத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மூவேந்தனா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது .இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்து போனார் . இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News