பைக் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி
தூத்துக்குடி மாவட்டம்,வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-17 11:42 GMT
பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி
தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி மாதா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகன் அண்டன் விக்டர் (28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார். நேற்று மாலை எட்டயபுரம் சென்றுவிட்டு பைக்கில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.வெங்கடேஷபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி அவரது பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த விக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து, லாரியை ஓட்டி வந்த கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் ஐயப்பன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.