திருமாந்துறை கூட்டுறவு சங்கம் முன்பு இறந்து கிடந்த வாலிபர்
திருமாந்துறை கூட்டுறவு சங்கம் முன்பு இறந்து கிடந்த வாலிபர் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் முன்பு உள்ள படிக்கட்டில் ஆண் ஒருவர் படுத்துக்கிடந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் எழாத நிலையில், அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது அவர் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். இது குறித்து மங்களமேடு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, வாலிபர் யார் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
இதில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ஆலத்தூர் கிராமம் கிழக்குத்தெருவை சேர்ந்த ஆறு முகத்தின் மகன் சவுந்தரராஜன் வயது 36. என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும். பரபரப்பை ஏற்படுத்தியது.