வண்டலூர் அருகே வாலிபர் பலி
வண்டலூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு.
By : King 24x7 Website
Update: 2023-10-30 06:18 GMT
வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சி துலுக்கானத்தம்மன் தெருவில் வசித்து வந்தவர் காண்டீபன் (வயது 36). இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் காண்டீபன் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது காண்டீபன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காண்டீபனை மீடுடு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் காண்டீபன் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காயார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.