நாகையில் உணவு மாதிரி எடுத்து மூன்று நாட்கள் ஆய்வு

நாகையில் விற்பனை செய்யும் உணவு வகைகளை உணவு மாதிரி எடுத்து மூன்று நாட்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-04-06 11:04 GMT

உணவு பொருட்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை, தஞ்சாவூர் உணவு பகுப்பாய்வு கூடத்தின், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், நாகூர் ஆண்டவர் தர்கா மற்றும் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி கேன்டின் பகுதியில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யும் உணவு வகைகளை உணவு மாதிரி எடுத்து மூன்று நாட்கள், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்பேரில், நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உணவு கலப்படம் மற்றும் பாதுகாப்பான உணவு குறித்து விழிப்புணர்வு கூட்டம் இன்று ( 05.04.24 ) நடைபெற்றது. கல்லூரி இணைச் செயலாளர் எஸ்.சங்கர் கணேஷ் முன்னிலையில்,

நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் மற்றும் தஞ்சாவூர் உணவு பகுப்பாய்வு கூடத்தின் இளநிலை உணவு பகுப்பாய்வாளர் சக்திவேல் ஆகியோர் உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். செய்முறை பயிற்சியும் நடைபெற்றது. மாணவர்கள் சந்தேகங்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் விடையளித்தார். 60 உணவு பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன.

3 உணவுகள் பாதுகாப்பற்றது எனவும், 4 உணவு பொருட்கள் தரம் குறைந்தது எனவும் கண்டறியப்பட்டது. இவை குறித்து உணவு விற்பனை நிலையங்களில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News