கவிழ்ந்து விழுந்த டிப்பர் லாரி - போக்குவரத்து பாதிப்பு
கவிழ்ந்து விழுந்த டிப்பர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
வேலூர் அருகே கீழ்மொணவூரில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மணலுடன் கவிழ்ந்த டிப்பர் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி மணல் குவாரியில் இருந்து ஆற்று மணல் ஏற்றுக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. அந்த லாரி கீழ்மொணவூர் அருகே வந்தபோது சாலையில் மத்தியிலுள்ள தடுப்புச்சுவரில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
இதில், லாரியில் இருந்த மணல் சாலையில் கொட்டி வீணாகியது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த விரிஞ்சிபுரம் காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் கவிழ்ந்து கிடந்த டிப்பர் லாரியும் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.