சாத்தூர் அருகே கார் மீது லோடு வேன் மோதி விபத்து: ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது லோடு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியானர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ஸ்ரீ ஐயப்பா நிறுவனத்தின் சார்பில் கடந்த ஒரு வாரமாக ஐந்து பேர் கொண்ட குழு செல்போன் டவர் பணி செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இவர்கள் தங்களது காரில் மேட்டமலை அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டு பணி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேட்டமலையைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் மணிகண்டன் லோடு வேன் ஓட்டி வந்தபோது வேன் நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சிவகாசி அருகில் உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்து (25) என்பவர் அடித்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவருக்கு லேசான காயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் உயிரிழந்த முத்துவின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்,
விபத்தினை ஏற்படுத்திய லோடு வேன் டிரைவர் மேட்ட மலையைச் சேர்ந்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நின்று கொண்டிருந்த காரின் மீது வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது