மூதாட்டி இறப்பில் தீடீர் திருப்பம் - நகைக்காக கொலை செய்த தம்பதி

மூதாட்டி இறப்பில் தீடீர் திருப்பம் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-02-22 06:18 GMT
  • whatsapp icon
பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம் இவரது மனைவி யசோதா . கணவர் உயிரிழந்த நிலையில் யசோதா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். யசோதாவிற்க்கு மகள் , மகன்களுக்கு திருமணம் ஆனநிலையில் , நேற்று முன்தினம் யசோதா வீட்டில் இறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் காமராஜ் என்பவர் பவானிசாகர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது அப்போது யசோதாவின் மகள்கள் இருவரும் தனது தாய் கழுத்தில் 2 1/2 பவுன் தங்க சங்கிலியும் தங்க கம்மல் 1/2 பவுன் கருத்த நிறத்தில் காணப்பட்டுள்ளது. இதில் சந்தேகமடைந்த மகள்கள் இருவரும் நகையை சோதனை செய்ததில் அது கவரிங் என தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் மகள்கள் இருவரும் தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தனர். விசாரணை மேற்க்கொண்டதில் யசோதாவின் வீட்டின் அருகில் உள்ள பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோர் யசோதா வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்க்குள் நுழைந்த தம்பதியினர் யசோதாவின் முகத்தை மூடி கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News