தி. மலையில் 1400 தொடர் நிகழ்வுகளுக்கான வெற்றி கொண்டாட்டம்

கலந்துரையாடுவோம் பேரவை சார்பாக தமிழ்நாடு 1400 தொடர் நிகழ்வுகளுக்கான வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-05-11 14:12 GMT

கலைஞர்கள் கவுரவிப்பு

திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் கலந்துரையாடுவோம் பேரவை சார்பாக தமிழ்நாடு 1400 தொடர் நிகழ்வுகளுக்கான வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது திருவண்ணாமலை நகர செயலாளர் ப. கார்த்திவேல்மாறன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்‌.

Tags:    

Similar News