நடை பயணமான மினி மாரத்தான்

Update: 2023-11-27 09:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தி மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த குறைவான மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பதாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் காத்திருப்பதற்கு பின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் விழிப்புணர்வு மாரத்தானை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.குறிப்பாக மினி மாரத்தான் போட்டியில் மாணவிகள் ஓடி வராமல் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று வயதான பெண்களும் கலந்து கொண்டது , அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

Similar News