மயிலாடுதுறை அருகே 80வயது கணவரை காப்பாற்றிய மனைவி கால் முறிந்து பலி
மயிலாடுதுறை அருகே 80வயது கணவரை காப்பாற்றிய மனைவி கால் முறிந்து பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-25 15:56 GMT
காவல் நிலையம்
மயிலாடுதுறை அருகே உள்ள நெடுமருதூர் பகுதியைசேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜ்(85), அவரது மனைவி குழந்தையம்மாள்(80). பெற்ற மகளும் திருமணம் ஆகி சென்றுவிட்டார்.
இருவரும் தனியாக வசித்துவந்துள்ளனர். சம்பவ தினத்தன்று படுத்த படுக்கையாக கிடந்த குழந்தையம்மாள் கட்டிலிலிருந்து பாத்ரூம் செல்ல எழுந்துள்ளார்.
தடுமாறி கீழே விழுந்ததில் இடதுகை எழும்பு முறிந்துவிட்டது, உடனடியாக அவரைமயிலாடுதுறைதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையம்மாளை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலன்றி குழந்தையம்மாள் இறந்துவிட்டார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.