ஓவேலியில் பலா மரத்தை உலுக்கிய காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் பலா பழம் சாப்பிட பலா மரத்தை உலுக்கிய காட்டு யானை, பழங்களை ருசித்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-14 15:57 GMT
பலா பழத்தை ருசிக்கும் யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் அரசு மற்றும் தனியார் தேயிலை, காஃபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் ஊடு பயிராக மாங்காய், பலா உள்ளிட்ட பலவகை பழ மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து மனித குடியிருப்பு பகுதிகளக்குள் நுழையும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில் ஓவேலி பகுதியில் காட்டு யானை ஒன்று தனியார் தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் காய்த்துள்ள பலாப்பழத்தை சுவைத்த நீண்ட நேரம் மரத்தை உலுக்கி பார்த்து.
அதில் இருந்து கீழே விழுந்த பழங்களை ருசித்தும் பின்னர் மரத்தின் மீது ஏறி பலாப்பழத்தை சுவைத்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.