தம்மம்பட்டி பேரூராட்சி தலைவி தாக்கியதாக பெண் பரபரப்பு புகார்
தம்மம்பட்டி பேரூராட்சி தலைவி தாக்கியதாக பெண் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவியாக கவிதா ( 40) என்பவர் பதவி வகித்து வருகிறார். இவருடைய கணவரும், தி. மு. க. முன்னாள் நகர செயலாளருமான ராஜா(50) தற்போது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் கவிதா தன்னை தாக்கி விட்டதாக கூறி தம்மம்பட்டி பேரூராட்சி காயிதே மில்லத் நகரை சேர்ந்த மேத்தா(40) என்ற பெண் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் மேத்தா ஏற்கனவே திருமணமாகி ஓராண்டு மட்டும் முதல் கணவருடன் வாழ்ந்து விட்டு அவரை சட்டப்பூர்வமாக பிரிந்து விட்டதாகவும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போதைய தி.மு.க. கவுன்சிலரான ராஜா (50) என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக எனது வீட்டிற்கு வருவதில்லை. இதனால் அவரை தேடி 2- வது மனைவியின் வீட்டிற்கு சென்றேன்.
அப்போது அங்கு இருந்த கவிதா என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் அடித்து உதைத்தார். இதில் எனக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை ராஜாவுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளேன்.
அதனை அவர்களிடம் இருந்து திரும்ப பெற்று தருவதுடன், அவர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.