நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்து
சாலப்பட்டு அருகே நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.;
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சித்தலவாய் அரசு பள்ளி தெருவை சேர்ந்தவர் சந்திரா வயது 48. இவர் நவம்பர் 26 ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில் கரூரிலிருந்து சேங்கல் செல்லும் சாலையில், சாலப்பட்டி நால்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சேங்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 26. இவரது மனைவி மகேஸ்வரி வயது 22. ஆகிய இருவரும் அவர்களுக்கு சொந்தமான டூவீலரில் அதே சாலையில் வேகமாக சென்று, நடந்து சென்ற சந்திராவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சந்திராவும், மகேஸ்வரியும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்திராவின் மகன் கார்த்தி வயது 29 என்பவர், வெள்ளியனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.