விவசாய நிலத்தில் வேலை செய்த பெண் பாம்பு கடித்து பலி
ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து பலியானர்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 14:15 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் அவர்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விஷ பாம்பு கடித்துள்ளது அருகில் இருந்த அவரது கணவர் முனுசாமி என்பவர் உதவியுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.