மிஷினில் சேலை சிக்கி காயமடைந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகர் அருகே பருப்பு மில் அரவை இயந்திரத்தில் சேலை சிக்கியதில் படுகாயமடைந்த பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Update: 2023-12-24 06:41 GMT
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் ஆரோக்கிய மேரி.இவருடைய கணவர் அந்தோணி. ஆரோக்கிய மேரி சாத்தூர் சாலையில் உள்ள பருப்பு ஆலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. பருப்பு மில்லில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக இவருடைய சேலை பருப்பு மில்லில் உள்ள இயந்திரத்தில் சிக்கி உள்ளது. அதன் காரணமாக அவர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.