நான்கு மணி நேரத்தில் 25 லட்சம் விதை பந்துக்கள் தயார் செய்து உலக சாதனை

Update: 2023-11-10 05:21 GMT

விதை பந்து தயார் செய்யும் மாணவிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி பச்சமுத்து கல்விக் குழுமங்களின் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 2500 பேர் தருமபுரி மாவட்ட பள்ளி குழந்தைகள் 7,500 பேர் என மொத்தம் 10000 நபர்கள் இணைந்து நான்கு மணி நேரத்தில் 25 லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்தனர். ஆலமரம்,அரசமரம், வேம்பு, அத்தி, மூங்கில், புளி, வில்வம் பூவரசு உள்ளிட்ட பல்வேறு விதைகளை கொண்டு இந்த விதைப் பந்துகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், காடுகள் அழிவது தடுக்கப்பட்டு, புதிய வனங்களை உருவாக்கவும் முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும், தமிழக முதலமைச்சரின் கனவுத் திட்டமான காடுகளை அதிகப்படுத்தும் பசுமைத் தமிழகம் (GREEN TAMILNADU MISSION) திட்டத்திற்கு பச்சமுத்து கல்வி குழுமங்களின் சார்பாகவும் மாணவ மாணவிகளின் சார்பாகவும் வழங்கவுள்ளதாகவும், தெரிவிக்கின்றனர் ஒரே இடத்தில், பத்தாயிரம் மாணவிகள் ஒன்றினைந்து நான்கே மணி நேரத்தில் இருபத்தைந்து லட்சம் விதை பந்துக்களை உருவாக்கியிருக்கியின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த சாதனையை பாராட்டி எலைட் வேர்ல்டு ரெக்காட்ஸ் என்ற அமைப்பினர் உலக சாதனைக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

Tags:    

Similar News