சேலம் கொண்டலாம்பட்டி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

சேலம் கொண்டலாம்பட்டி அருகே இளம்பெண் திருமணமான இரண்டு நாட்களில் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-01-30 12:07 GMT

கோப்பு படம் 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காட்டைச் சேர்ந்தவர் முத்து (23). வெள்ளி கொலுசு பட்டறை தொழிலாளி. இவருக்கும், அனிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 2 நாட்கள் ஆகிறது.

இதற்கிடையே அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அனிதா தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

இருந்தாலும் திருமணம் ஆகி 2 நாட்கள் ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News