மூதாட்டியிடம் நூதன மோசடி செய்த இளம் பெண் 

போலி நகைகளை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய இளம்பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-06 06:16 GMT
மோசடி

தக்கலை அருகே வெட்டிக்கோணம்பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் மனைவி கிருஷ்ணகுமாரி (60). சம்பவ தினம் தக்கலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு அண்ணா சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 18 வயது மதிக்க ஒரு பெண் கிருஷ்ணகுமாரியின் கையை பிடித்துக் கொண்டு, தனது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், அவரது ஆப்ரேஷன் செல்வதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. உங்களிடம் பணம் இருந்தால் தாருங்கள் எனக்கூறியுள்ளார்.

Advertisement

அதற்கு பதிலாக தன்னிடம் உள்ள நகையை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி, அந்த இளம் பெண் 19 தங்க நாணயங்கள் ஒரு தாலிக்கொடி ஆகியவற்றை கிருஷ்ணகுமாரியிடம் கொடுத்து அவரிடமிருந்து 35 ஆயிரம் ரூபாய், ஒரு பவுன் தங்க செயினையும் வாங்கியுள்ளார். அந்த பெண் செல்போன் நம்பர் கொடுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கிடைக்கவில்லை.

இதனால் சந்தைமடைந்த கிருஷ்ணகுமாரி இளம்பெண் கொடுத்த தங்கம், தாலி கொடியை நகைக்கடைக்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது அவைகள் போலியானவை என்று தெரிய வந்தது. இதனால் ஏமாற்றப்பட்ட உணர்ந்த கிருஷ்ணகுமாரி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து இளம்பெண் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News