சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் இளம்பெண் தர்ணா
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வாயிலில் இளம்பெண் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கருகுடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் மனைவி திவ்யா. இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் இவரது கணவர் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு ஈடுபட்டதோடு, அவரது மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் கணவர் குடும்பத்தினர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர் தனது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை ஆட்சியரிடம் அழைத்து சென்ற நிலையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அப்பெண் போராட்டத்தை கைவிட்டார்