அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி
Update: 2023-12-16 09:47 GMT
இளைஞா் பலி
நிலக்கோட்டை அருகேயுள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் பரசுராமன். இவருக்கு அபிஷ்குமார் (22), மணிகண்டன் (20) என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அபிஷ் குமார், மணிகண்டனும் வெளியே சென்று விட்டு டூவீலரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். செம்பட்டி சாலையில் வந்த போது எதிரே வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலே மணிகண்டன் உயிரிழந்தார். அபிஷ் குமார் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.