மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்து கொள்ளலாம்

சேலம், குகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆதார் பதிவு செய்யும் முகாமில் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-24 02:25 GMT

மாணவர்கள் ஆதார் பதிவு செய்து போது 

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியிலேயே மாணவ, மாணவிகள் ஆதார் எண் பதிவு செய்யும் திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. தொடர்ந்து சேலம், குகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதார் பதிவு செய்யும் முகாம் நேற்று நடந்தது. இதை கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது,

பள்ளி மாணவ, மாணவிகள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய நிலையை தவிர்க்க தற்போது இந்த பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் முகாம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாணவ, மாணவிகள் இனி பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்து கொள்ளலாம்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் 20 ஆயிரத்து 146 மாணவ, மாணவிகள் ஆதார் எடுக்க வில்லை. அவர்களுக்கு ஆதார் எடுக்கப்படும். மேலும் புதுப்பிக்கு தேவை உள்ள மாணவ, மாணவிகளுக்கும் புதுப்பித்தல் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

தேவையுள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த முகாம் நடைபெறும். முகாமை பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் பெற்றுத்தர அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News