ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்;
ஆதார் பதிவு சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' சிறப்பு முகாம் ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது. வருவாய் அலுவகர் ஆலோசனைப்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் அவர்கள் துவக்கி வைத்து ஆதார் பதிவு செய்யப்பட்ட ஒப்புகை சீட்டினை மாணவர்களுக்கு வழங்கினார். இம்முகாம் மூலம் துவக்க நாளில் 23 மாணவர்கள் பயன்பெற்றனர். அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள். தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்கள் EMIS தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் மாணவர்கள் பெற்றோர் விவரங்கள். முகலரி, ஆதார் எண் போன்றங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அரசு திட்டங்களை பெறவும். உயர்கல்விக்கான உதவித்தொகை பெறவும். வங்கி கணக்கு துவங்கவும் ஆதார் எண் தேவைப்படுகிறது. ஆகையால் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்களுக்கான ஆதார் முகாமில் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்துக் கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாம் நடைபெறும் விவரங்கள் தலைமையாசிரியர் வாயிலாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும்.