உலகளந்த பெருமாள் கோவில் ஆழ்வார்கள் உற்சவம்

நாலாயிர திவ்யபிரபந்த விழாவையொட்டி உலகளந்த பெருமாள் கோவிலில் ஆழ்வார்கள் உற்சவம் நடந்தது.

Update: 2023-10-28 08:14 GMT

ஆழ்வார்கள் உற்சவம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருக்கோவிலூரில் மிகவும் பிரசித்திபெற்ற உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவோணம், அவிட்டம், சதயம் திருநாட்களில் நாலாயிர திவ்யபிரபந்த விழாவையொட்டி ஆழ்வார்கள் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆழ்வார்கள் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பொய்கை ஆழ்வார், பூதத்ஆழ்வார், பேயாழ்வார் ஆகிய சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கோவில் தேவஸ்தான ஏஜென்ட் கிருஷ்ணன் என்கிற கோலாகலன் தலைமையில் விழா குழுவினர்களும் உபயதாரர்களும், முக்கிய பிரமுகர்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News