ஆத்தூர்: அய்யானார்பாளையத்தில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம்

ஆத்தூர் அருகே அய்யானார்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ₹10 லட்சம் மதிப்பீட்டில் 10.5 அடி உயரத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.

Update: 2024-04-15 11:27 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அய்யானார்பாளையத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் கோவிலில் ஊர் பொதுமக்கள் சார்பாக புதிதாக சுமார் ₹10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 10 .5 அடி உயரமுள்ள புதிய தேர் செய்யப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று பின்னர் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கலசங்கள் வைத்து பின்னர் கணபதி ஹோம்ம் மற்றும் தேருக்கான சிறப்பு பூஜைகள் செய்து ஆடு,கோழி பலியிட்டு, அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தேரை ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கை மற்றும் மேளதாளங்களுடன் அப்பகுதி மக்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர் பின் னர் தேர் கோவில் நிலையடிந்த்து தீபாரனை செய்து அப்பகுதிமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித் குமார் வி பி சேகர் தென்னங்குடி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சுமணி ஊர் கரைகாரர்கள் மேலும் இக்கோவிலில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மாரியம்மன் அருள் பெறறனர்.

Tags:    

Similar News