தொடக்கப்பள்ளி பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் 243 ரத்து செய்க- வேலுமணி !!
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-07-05 09:48 GMT
தொடக்கப்பள்ளி பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் 243 ரத்து செய்க- வேலுமணி. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாவட்ட செயலாளர் வேலுமணி செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் இடமாற்றம் செய்தாலே ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது, 243 சட்டம் மாநில அளவில் இடமாற்றம் செய்யும்போது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள போது, பதவி உயர்வை பறிக்கும் நோக்கில் பணி மாற்றம் குறித்த கலந்தாய்வை இந்த அரசு நடத்துகிறது. எனவே கலந்தாய்வை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக, தொடக்கப்பள்ளி பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு என்பது இதன் மூலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. எனவே, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அதற்காக இன்று தமிழக முழுவதும் பணி மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறும் மையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.