ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவு நீக்கம் : பெ.மணியரசன்
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவு நீக்கம் குறித்து பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் ஆட்சியாளர்கள் விருப்பத்தை நீதிமன்றம் தீர்ப்பாக்கியுள்ளது. ஏமாற்றம் அளிக்கிறது என தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது, இந்திய விடுதலைக்கு தனிநாடாக விளங்கிய ஜம்மு காஷ்மீர், இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்நாட்டுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அது இந்தியாவுடன் சிறப்புரிமை கொண்ட மாநிலமாக இணைக்கப்பட்டது. அந்தத் தனிச் சிறப்புரிமை இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவு , 370-ன் கீழ் வழங்கப்பட்டது.
இந்த சிறப்புரிமை பிரிவை, 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆணையின்கீழ், மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் என்றும் லடாக் என்றும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்து, அதற்கிருந்த மாநில அங்கீகாரத்தையும் ரத்து செய்தது மத்திய அரசு. குடியரசுத் தலைவரின் மேற்படி ஆணைகளை , நாடாளுமன்றத்தில் வைத்து சட்டத்திருத்தமாகவும் நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்த உரிமைப் பறிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்ட டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கிருந்த பிரிவு 370-ஐ நீக்கியதும், லடாக்கை தனியாகப் பிரித்ததும் செல்லும் என்றும், எஞ்சிய ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநிலத் தகுதி வழங்கி 2024 செப்டம்பர் 30-க்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அது தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உள்ளது. இதை வெட்ட வெளிச்சம் ஆக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இத்தீர்ப்பை வெகுவாகப் பாராட்டி, வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சிறப்புரிமை பிரிவு 370 இல்லாத ஜம்மு - காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்களும், அதானி -அம்பானி உள்ளிட்ட வெளிமாநிலப் பெரு முதலாளிகளும், சிறு முதலாளிகளும் புகுந்து ஆக்கிரமிக்கக் கதவு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசமைப்பின் சட்டப்பிரிவு 370-ஐமுற்றாக நீக்கியதன் மூலம், சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளோருக்கு பெரும் அதிர்ச்சி யையும் ஏமாற்றத்தையும் அளிக் கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.