கெங்கவல்லி அருகே தலைமறைவு குற்றவாளி கைது

கெங்கவல்லி அருகே அடிதடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.;

Update: 2024-04-23 04:49 GMT

பைல் படம் 

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே, கூடமலை ஊராட்சியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் சங்கர். மனோகரன், பிரபாகரன், பிச்சைபிள்ளை ஆகியோருக்கும், கடந்த 2020ம் ஆண்டு அடி தடி பிரச்னை ஏற்பட்டது. இது சம்மந்தமாக கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் குமார் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சங்கர், மனோகரன், பிரபாகரன், பிச்சைபிள்ளை ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

Advertisement

இவ்வழக்கில் முறையாக ஆஜராகாமல் இருந்து வந்த பிரபாகரன் மற்றும் சங்கர் ஆகிய இருவருக்கும், நீதிபதி கடந்த 19ம் தேதி பிடிவாரன்ட் பிறப்பித்தார்.மூன்று மாதங்களாக தேடி வந்த குற்றவாளிகளில், பிரபாகரன் தம்மம்பட்டியில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருந்த போது, கெங்கவல்லி எஸ்ஐ செந் தில்குமரன் மற்றும் போலீசார் அவரை பிடித்து சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News