மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் உறுதி மொழி ஏற்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-08 12:15 GMT
உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷேக் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் மனித உரிமைகள் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், அலுவலக மேலாளர் ஹரிஹரன், அலுவலக மேலாளர் அருணாசலம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஹென்றி பீட்டர், தனி வட்டாட்சியர் (தேர்தல்) மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.