அமைச்சர் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் தலைமையில் நடந்த மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் மும்மதங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Update: 2024-01-31 08:40 GMT
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரும் மதவேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு கூட்டம் விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன் முன்னிலையில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் " அன்பை வாழ்க்கை அறநெறியாக் கொண்டும், மனித நேயத்தை நடைமுறை வழியாகக் கொண்டும் வாழ்வேன்! அனைத்து உயிரும் ஒன்றென்று நினைத்து அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வேன் எனவும் மதவெறி விலக்கி,மதநல்லிணக்கம் பேணுவேண்,மானுடம் போற்றுவேன் போன்ற உறுதிமொழியை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் எடுத்துக்கொண்டனர்.